உடல் எடை குறையனுமா.. இந்த பழக்கத்த நிறுத்துங்க போதும்..

அன்றாட வாழ்க்கையில் நமது பழக்கவழக்கம் மாறுவதால், பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதில், ஒன்று தான் சக்கரை நோய் மற்றும் உடல் எடை அதிகரித்தல்.

இந்நிலையில், எண்டோகிரைன் சொசைட்டியின் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி மற்றும் மெட்டபாலிசம் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், இரவில் தாமதமாக உணவு உண்ணும் பழக்கம் உடையவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், சீக்கிரமாகவே உணவை சாப்பிட வேண்டும் என்று அறிவுத்தப்படுகின்றனர். இதுமட்டுமின்றி, அதிகம் காரம் இல்லாத, விரைவில் செரிமானம் அடையக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.