‘பொண்டாட்டி கிட்ட அடி வாங்க முடியல சார்’ – போலீசில் புகார் அளித்த கணவர்

பொதுவாக கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதை பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் கணவர் ஒருவர் தன்னால் மனைவியிடம் அடி வாங்க முடியவில்லை என, காவல்துறையில் புகார் அளித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித் சிங். இவர் சுமன் என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Advertisement

இந்நிலையில், அஜித் சிங் தன் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த ஓராண்டு காலமாக மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

பாத்திரம், குச்சி, கிரிகெட் மட்டை உள்ளிட்ட பொருள்கள் மூலம் தன்னை அடிப்பதாக கூறி சிசிடிவி பதிவுகளையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.