மனைவியை கொலை செய்தது எப்படி-? கணவன் கொடுத்த வாக்குமூலம்

கேரள மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

உத்ராவின் பெற்றோர் அவருடைய திருமணத்தின்போது 784 கிராம் தங்க நகைகளும் ஒரு காரும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் சூரத் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சூரஜ் வீட்டிற்கு வெளியே பாம்பு ஒன்று உத்ராவை கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல நாட்கள் உயிருக்கு போராடி ஏப்ரல் 22 ஆம் தேதி டிச்சார்ஜ் செய்யப்பட்டு கொல்லம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

Advertisement

மே 7ம் தேதி உத்ரா தனது பெற்றோர் வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து உத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் டாக்டர்கள் விஷப்பாம்பு கடித்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது படுக்கை அறையில் ஒரு விஷப் பாம்பு இருந்ததை கண்டனர். இந்நிலையில் உத்ராவின் பெற்றோர்கள் தனது மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் உத்ராவின் கணவர் சூரஜை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். மனைவியை கொலை செய்ய கூகுளில் பாம்புகளைத் தேடி உள்ளார். அதன்மூலம் அந்த பாம்பை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.பிறகு அந்த விஷப் பாம்பை உத்ரா மீது வீசியுள்ளார்.

அந்தப் பாம்பு இரண்டு முறை கடித்ததில் உத்தரா மரணமடைந்துள்ளார் மித்ராவை கொல்ல சூரஜ் பாம்புகளுடன் இரண்டு முயற்சிகளுக்கு மேல் செய்தாரா என்பது தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.