இடியட் திரை விமர்சனம்
தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2 போன்ற படங்களை இயக்கிய ராம்பாலா இயக்கியுள்ள படம் இடியட். இப்படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பேய் படங்களின் கதை தான் இடியட் படத்தின் கதை. வழக்கம்போல பாழடைந்த பங்களா, அதில் ஒரு பேய், அந்த பேய்க்கு ஒரு பிளாஷ்பேக் என அரைத்த மாவையே திருப்பி அரைத்துள்ளார் இயக்குனர் ராம்பாலா.
இதற்கு முன்பு வெளியான தில்லுக்குதுட்டு 1 மற்றும் தில்லுக்குதுட்டு 2 ஆகிய படங்களில் பேயை வச்சு செய்த ராம் பாலா இந்தப் படத்திலும் அதனை தொடர்ந்துள்ளார்.
மிர்ச்சி சிவா வழக்கம்போல் கலகலப்பான நடிப்பை கொடுத்துள்ளார். நிக்கி கல்ராணி அவரது பங்கிற்கு அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.
முதல் பாதி சுமாராக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஆனந்தராஜ், ஊர்வசியின் நடிப்பு ஓரளவு ரசிக்க முடிகிறது.
படத்தில் லாஜிக் பற்றி கவலைப்படாமல் முழு காமெடி படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ராம்பாலா இக்கதையை உருவாக்கியுள்ளார். படத்தில் வரும் ஜோக்ஸ் எல்லாமே ஏற்கனவே வெளிவந்த பழைய ஜோக்குகள்
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக உள்ளது.
மொத்தத்தில் இந்த படம் தில்லுக்கு துட்டு, தில்லுக்குதுட்டு 2 படத்தின் மூன்றாம் பாகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
