சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை : அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக கேரளா லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தடையை மீறி லாட்டரி விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நபர்களை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள் வாட்ஸ் அப் குழு ஒன்று அமைத்து ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக மச்சுவாடி அருகே உள்ள பாலன் நகர் பகுதியை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு திருமயம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement