கொண்டு போனது 160 ரூபாய்.. கொண்டு வந்தது கோடி ரூபாய்..!

தாய்லாந்து நாட்டை சார்ந்த ஒரு பெண்மணி, வீட்டில் சமைப்பதற்காக உள்ளூர் மீன் சந்தையில் சுமார் 160 ரூபாய்க்கு நத்தைகளை வாங்கியுள்ளார். வாங்கிய நத்தைகளை வீட்டில் வந்து சுத்தம் செய்துள்ளார்.

அப்போது ஒரு நத்தைக்குள் மஞ்சள் நிற கல் போன்ற பொருள் ஒன்று இருந்துள்ளது. அது சாதாரண கல் என்று நினைத்த அந்த பெண்மனி, அருகில் உள்ளவர்களிடம் இதை பற்றி சொன்னார்.

அதனை பார்த்த உறவினர்கள், இது கல் அல்ல ஆரஞ்சு மெலோ முத்து, இதன் விலை மதிப்பு அதிகமாக இருக்கும் என்று சொன்னார்கள். இதை கேட்டு அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த மெலோ முத்துவை வீட்டில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

Advertisement

அந்த பெண்மனியின் தாய், தந்தை சமீபத்தில் புற்று நோயல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில். சிகிச்சைக்கு பணம் அதிகமாக தேவைப்பட்டது. உடனே அந்த மெலோ முத்துவை 2 கோடிக்கு விற்றுள்ளனர்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அவர்களுக்கு கிடைத்த லக்கு என்று கூட சொல்லலாம். கடைக்கு போகும் போது கொண்டு போனது 160 ரூபாய், ஆனால் அங்கிருந்து கொண்டு வந்தது 2கோடி ரூபாய்.