உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பரான உணவுகள் இதோ..!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் கொரோனா போன்ற தொற்று வியாதிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமும் உடற்பயிற்சி செய்வது, பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் என அனைத்திலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி இதில் பார்ப்போம்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம் சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதனை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. ஒரு நாளைக்கு ஒரு பழம் மட்டும் சாப்பிடலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி. இ, இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை பழமாகவும் பழச்சாறாகவும் அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இது உடலுக்கு பல நன்மைகளை தரும்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள் உடலுக்கு வலிமையை தரும். நுரையீரலுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அனைத்தும் ஆப்பிள் பழத்தில் அதிகளவு கிடைக்கிறது.

நெல்லிக்காய்

ஆப்பிளைவிட நெல்லிக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நெல்லிக்காய் சாற்றுடன் எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி உடல் சோர்வை தடுக்கும். அடிக்கடி எலுமிச்சை சாறு அருந்தி வந்தால் தாகம் அடங்கும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

பேரிச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.

Recent Post