ஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பு ஆரம்பமானது.

சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்ச்சியாக சுமார் 5 முதல் 8 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளில் இருப்பதால் அவர்களின் கண்களில் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கண் சிகிச்சை நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்ட போது குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு அதிகரித்து இருப்பதை கண்சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அருகில் இருக்கும் பொருள்கள் மற்றும் எழுத்துக்கள் தெளிவாக தெரிவது இல்லை. ஆனால் தூரத்தில் இருக்கும் பொருள்கள் மற்றும் எழுத்துக்களை அவர்களால் தெளிவாக பார்க்க முடியும்.

Advertisement

இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் பிற்காலத்தில் பார்வை இழப்பை சந்திக்க நேரிடும். எனவே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என கண் சிகிச்சை நிபுணர் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்