ஆண்மை அதிகரிக்க உதவும் வீட்டு உணவுகள்

ஆண்மை அதிகரிக்க பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவமே சிறந்தது. படித்து பயன்பெறுங்கள்.

வில்வபட்டை, சீரகம் இரண்டையும் நன்றாக இடித்து பொடி செய்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

தாளிக்கீரையை நன்கு சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர விந்து குறைபாடு பிரச்சனை நீங்கும்.

12 பாதம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். காய்ந்த திராட்சையோடு அதிமதுரப் பொடியை சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும்.

முருங்கை இலை, பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, கரிசலாங்கண்ணி கீரை இதில் ஏதேனும் ஒரு கீரையை தினமும் சமைத்து சாப்பிட உணர்வு மேலோங்கும்.

கருப்பட்டி கலந்த தேங்காய் பால், அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் தூவி சாப்பிட ஆண்மை உணர்வு கூடும்.

மாதுளை ஜூஸ், முருங்கைக்கீரை சூப், முருங்கைக் காய், பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு இது புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.

நாட்டுக்கோழி இறைச்சி காமத்தைப் பெருக்கும். முருங்கைக்கீரை, தூதுவளைக் கீரை, பசலைக் கீரை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை பருப்பு, தேங்காய்த் துருவல், கொஞ்சம் நெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.

5 அல்லது 6 முருங்கைப் பூக்களுடன் பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரப்பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து குடித்தால், உயிரணுக்களின் உற்பத்தியும், இயக்கமும் அதிகரிக்கும்.

வாழைப்பழம், போலிக் அமிலம் கொண்ட ஸ்ட்ராபெரி, மாதுளம் பழம் தாம்பத்தியத்திற்கு நல்லது. நல்லெண்ணெய் குளியல் பித்தத்தைச் சீராக்கி, விந்து அணுக்களைப் உயர்த்தும்.

சுறா மீன், காடை மற்றும் நண்டு போன்ற உணவுகளை உண்ணலாம். இதில் ஆண்மையை அதிகரிக்கும் பல தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளது.

நீச்சல் பயிற்சி ஆண்மையை பெருக்க உதவும். குடி பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அழகான தாம்பத்திய உறவிற்கு உடல் உறுதி மட்டுமல்ல, மன உறுதியும் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆண்மைக் குறைவைத் தீர்க்கும் கீரைகள்!

 • முளைக்கீரை
 • முள்ளங்கி கீரை
 • துத்திக்கீரை
 • பொன்னாங்கண்ணி
 • மணத்தக்காளி
 • முருங்கைக்கீரை
 • அகத்திக் கீரை
 • கொத்துமல்லிக் கீரை
 • கருவேப்பிலை
 • வெந்தயக்கீரை

ஆண்மையைப் பெருக்கும் கிழங்குகள்

 • உருளைக்கிழங்கு
 • கருணைக் கிழங்கு
 • சர்க்கரை வள்ளிக் கிழங்கு
 • சேப்பங்கிழங்கு
 • தண்ணீர்விட்டான் கிழங்கு
 • நிலப்பனங்கிழங்கு
 • பூமிசர்க்கரைக் கிழங்கு
 • மரவள்ளிக்கிழங்கு

ஆண்மையைப் பெருக்கும் பால் வகைகள்

 • வெள்ளாட்டுப்பால்
 • பசும்பால்
 • பருத்திப்பால்
 • ஆலம்பால்
 • பால்சாதம்
 • தேங்காய்ப்பால்

விந்து உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்

மனித விந்தணு புதிய உயிரை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகித்து, வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது.

உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களுக்கு விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கும்.

புகை பழக்கம், மது அருந்துவதை நிறுத்த வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.

தாளிக்கீரையை நன்கு சுத்தம் செய்து பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு குறைபாடு நீங்கும்.

அரச மரத்தின் விதையை அரைத்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

பலா பிஞ்சினை ச‌மைத்து மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்றாக விந்து உற்பத்தியாகும்.

பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இதனை 75 கிராம் அளவு எடுத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விந்து பலம் பெறும்.

விந்துவை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வெந்தயம் பயன்படுகிறது. எனவே உணவில் அடிக்கடி வெந்தயம் சேர்த்து கொள்ளலாம்.

பூசணி விதைகளில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளது. இது விந்து அணுக்களின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

மாதுளை ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால், விந்து நீர்ப்பு இல்லாமல், விந்துவின் சக்தியும் அதிகரிக்கும்.

குருந்தட்டி வேரை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்.

அமுக்குரா வேரை பொடியாக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வர விந்தணுக்கள் பெருகி கெட்டிப் படும்.