மனித விந்தணு புதிய உயிரை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகித்து, வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது.
உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களுக்கு விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கும்.
புகை பழக்கம், மது அருந்துவதை நிறுத்த வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.
தாளிக்கீரையை நன்கு சுத்தம் செய்து பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு குறைபாடு நீங்கும்.
அரச மரத்தின் விதையை அரைத்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். ஆண்மை குறைபாடு நீங்கும்.
பலா பிஞ்சினை சமைத்து மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்றாக விந்து உற்பத்தியாகும்.
பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இதனை 75 கிராம் அளவு எடுத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விந்து பலம் பெறும்.
விந்துவை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வெந்தயம் பயன்படுகிறது. எனவே உணவில் அடிக்கடி வெந்தயம் சேர்த்து கொள்ளலாம்.
பூசணி விதைகளில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளது. இது விந்து அணுக்களின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மாதுளை ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால், விந்து நீர்ப்பு இல்லாமல், விந்துவின் சக்தியும் அதிகரிக்கும்.