in

அதிகரிக்கும் வன்கொடுமைகள்… அதிகமாகும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு

ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பு சிதைவு சம்மந்தமான சம்பவங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு என்னும் பெயரில் வீடு வீடாக சென்று இந்த கோர சம்பவத்தை பாரம்பரிய சடங்கு என்ற பெயரில் பல நாடுகளில் நிகழ்த்தி வருகின்றனர். இதனை தீவிரமாக பின்பற்றி வரும் ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள சோமாலியா மக்கள் அங்கு உள்ள இளம் பெண்களுக்கு சடங்கு என்கிற பெயரில் பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதி நீக்குவது அல்லது முழுவதுமாக தைத்து விடுவது போன்ற இந்த கொடுமை இந்த ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி அதிகமாக நடந்து வருகிறது.

Genital mutilation

இதற்கு எதிராக பல்வேறு தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இது இன்னும் தொடர்கதையாகி உள்ளன. இதனால் பெண்கள் வாழ்நாள் முழுவதும் அவதிக்குள்ளாகின்றனர்.

அந்த ஊர்களில் பிறப்புறுப்பு சிதைக்கும் வேலை செய்பவர்கள் வீடு வீடாக சென்று இதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கொடுத்த தகவலின் படி சோமாலியாவில் 98 சதவிகித பெண்களுக்கு இந்த கொடுமை நடத்தப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் 20 கோடி பெண்களுக்கு மேல் சிதைப்பு நடத்தப்பட்டுள்ளது என தெரியவந்திருக்கிறது.

இப்படியும் ஒரு கொடுமையா…