சாத்தான்குளம் வழக்கு..! கண்டனம் தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ். இவர்கள், இருவரும் சிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பின் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இருவரின் மரணமும், காவலர்களால் தான் நடந்தது என்று பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஷிக்கர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணம் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாம் அனைவரும் ஒன்றினைந்து, அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.