பாதம் பருப்பில் பிரதமர் மோடி ஓவியம்

அமீரக துணை அதிபர் மற்றும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் 71-வது பிறந்த நாளையொட்டி இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் அமன் சிங் குலாதி பாதாம் பருப்பில் ஓவியம் வரைந்துள்ளார்.

அதில் துபாய் ஆட்சியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கை குலுக்குவது போன்று ஓவியம் வரையப்பட்டுள்ளது.

ஓவியத்தின் பின்புறம் இந்திய தேசிய கொடிகள் இருப்பது போல வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement