மைக்ரோசாஃப்ட்டில் பிழையை கண்டறிந்த இந்திய பெண்மணிக்கு 22 லட்சம் பரிசு

பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அசூர் கிளவுட் பிளாட்பாரத்தில் ஏற்பட்ட பிழையை கண்டறிந்து இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பரிசு பெற்றுள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் அதிதி சிங். இவர், இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மைக்ரோசாஃப்ட்டின் அசூர் கிளவுட் பிளாட்பாரத்தின் ரிமோட் கோட் எக்ஸிகியூஷனில் பிழை இருந்துள்ளது. மேலும், அது பாதுகாப்பு விசயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.

Indian girl gets over Rs 22 lakh bounty from Microsoft

மைக்ரோசாப்ட் அசூர் என்பது கிளைவுட் டெக்னாலஜி ஆகும். இந்த பிழையை கண்டறிந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு தெரிவித்ததன் மூலம் அதிதி இந்திய மதிப்பில், சுமார் ரூ.22 லட்சம் பரிசாக பெற்றுள்ளார்.

Advertisement

அதிதி சிங்கின் வாழ்க்கை தொடக்கம் முதல் வித்தியாசமான ஒன்றாகவே இருந்துள்ளது. அவர் தனது பள்ளிப்பருவத்தில் ஐஐடி மற்றும் மருத்துவ தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். இருப்பினும், விரைவில் அவர் தன்னால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டார். அவர் கணினி அறிவியலில் அதுவரை எந்த முன் அனுபவமும் பெற்றிருக்கவில்லை. ஆனால், தற்போது அவர் மேப் மை இந்தியாவில் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அவர் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் youtube மற்றும் கூகுள் உதவியுடன் ஜாவா, MySQL போன்ற நிரலாக்க மொழிகளை கற்று கொண்டேன். மேலும், youtube மூலம் பாதுகாப்பு குறைபாடுகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டேன். அத்துடன் இதுகுறித்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எவ்வாறு புகாரளிப்பது என்பது குறித்தும் கற்றுக் கொண்டேன். தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறேன்” என தெரிவித்தார்.