சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..! வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில், தென்மேற்கு பருவகாலம் நிலவி வருவதால், மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

தற்போது கூட, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் வரை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை மையம், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில், மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.