உலக அளவில் கறுப்புப் பணம் சேமிக்கும் இடமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்திய பணக்காரர்களின் பெருமளவிலான பணம் சேமிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள் இதனை சட்டப்பூர்வ சொத்தாகவே கணக்கிடுகின்றன. சுவிஸ் நேஷனல் வங்கியின் (SNB) அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இந்தியர்களின் டெபாசிட் மூன்று மடங்கு அதிகரித்து, ரூ.37,600 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இது மொத்தத்தில் 3534.54 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஆகும்.
டெபாசிட் விவரங்கள்
இந்த பெரும் தொகையில் பெரும்பாலானவை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணக்குகளிலேயே வந்துள்ளதாக SNB அறிக்கை தெரிவிக்கிறது.
- வங்கிகள்: 3.02 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்
- தனிப்பட்ட கணக்குகள்: 346 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் ரூ.3,675 கோடி)
- அறக்கட்டளைகள்: 41 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்
- பத்திரங்கள்: 135 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்
தனிநபர் டெபாசிட் வெறும் 11 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது, இது மொத்த பணத்தில் 10-ல் ஒரு பங்கு ஆகும்.
கடந்த கால நிலவரம் மற்றும் உலகளாவிய ஒப்பீடு
- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் இந்த அளவு அதிகரிப்பது, 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறை.
- 2021-ல் 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்தது.
- 2006-ல் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இருந்த பணம், பின்னர் படிப்படியாக சரிவடைந்தது.
- சுவிஸ் வங்கிகளில் அதிக தொகை வைத்துள்ள நாடுகளில் பிரிட்டன் முதலிடத்தில் (222 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்) உள்ளது.
- அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் (89 பில்லியன் பிராங்குகள்), மேற்கிந்திய தீவுகள் மூன்றாவது இடத்திலும் (68 பில்லியன் டாலர்கள்) உள்ளன.
- டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் அடிப்படையில் இந்தியா கடந்த ஆண்டு 67வது இடத்தில் இருந்து 48வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
Nirav Modi சொத்து முடக்கம்
நிரவ் மோடியின் 283 கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.