சீனாவுக்கு 50,000 கோடியை அள்ளிக்கொடுத்த இந்தியர்கள். கொண்டாடும் சீனா, திண்டாடும் இந்தியா…

நாம் நமக்கு தெரிந்தே சீனாவுக்கு ரூபாய் 50,000 கோடியை அள்ளிக்கொடுத்துள்ளேம், என்ன? எப்படி என்று புரியவில்லையா?

2018 நிதி ஆண்டின் ஆய்வு அறிக்கையின் படி, இந்திய ஸ்மார்ட் போன்களை விட, மக்கள் சீனா தயாாிக்கும் ஸ்மார்ட் போன்களையே அதிகம் வாங்கியுள்ளனர். இது போன நிதி ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணம், அவர்களது அதிகமான விளம்பரமும் மற்றும் மக்களின் மோகமும்மே. இதனால், இந்திய  ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் மிகவும் நசுக்கப்படுகின்றனர்.

Advertisement

அதிலும், Xiaomi, Oppo, Vivo மற்றும் Honor போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள்தான் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஸ்மார்ட் போன்களின் அதிக சந்தை மதிப்பை சீனா நிறுவனங்கள் பெற்று வருகிறது.

இந்தியா, தென்கொாியா மற்றும் ஐப்பான் நாடுகள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களை விட, சீனா தயாரிப்புகள் மிகவும் நவீனமயமாகவும், குறைந்த விலையிலும் இருப்பதால் அவைகள் அதிகம் விற்கப்படுகின்றன. மேலும், இந்தியர்கள், இந்திய தயாரிப்பைவிட வெளிநாட்டு தயாரிப்புகளையே அதிகம் வாங்க விரும்புகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

சீனா நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதால் அடுத்த தயாரிப்புகளில் புதுப்புது நுட்பங்களை புகுத்தி வெளியிடுவதால் அவர்களின் விற்பனை அமோகமாக உலகம் முழுவதும் உள்ளது.

“Make In India” திட்டத்தின் மூலம் Xiaomi, Oppo, Lenovo-Motorola, Huawei and Vivo போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மூதலீடு செய்து ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து வருகின்றது. ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க 15,000 கோடி ரூபாய் மூதலீடு செய்ய உள்ளதாக Xiaomi நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Oppo நிறுவனம் உத்தரபிரதேசத்தில் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன் தொழிற்சாலைகளை திறக்கவுள்ளது.

2018-ன் நிதி நிலை அறிக்கையின் படி, Xiaomi நிறுவனம் 22,947.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 8,334.4 கோடி ரூபாய்), Oppo நிறுவனம் 1,994.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 8,050.8 கோடி ரூபாய்), Vivo நிறுவனம் 11,179.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 6,292.9 கோடி ரூபாய்), Huawei Telecommunications நிறுவனம் 5,601.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 3,584.2 கோடி ரூபாய்).

2018-ல் மொத்தமாக இந்த நான்கு சீனா நிறுவனங்கள் வருமானம் ஈட்டிய மொத்த தொகை 51,722.1 கோடி ரூபாய், இதே நிறுவனங்கள் 2017-ல் 26,262.4 கோடி ரூபாய் வருமானம் பெற்றது. 2017-ஐ விட 2018-ல் இருமடங்கு வருமானத்தை பெற்றுள்ளது.

ஹாங்காங்கை மய்யமாக கொண்ட Counterpoint Research என்ற நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி இந்திய ஸ்மாா்டபோன் நிறுவனங்கள் 1.5 லட்சம் கோடி ரூபாயை 2018-ல் வருமானமாக ஈட்டியுள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் 2017-ல் ஈட்டிய வருமானம் 1.7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

இந்திய நிறுவனங்கள் 10% – 11% வரை நிலையான சந்தை மதிப்பை பெற்றுள்ளது என ஆய்வில் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனா நிறுவனங்களை தவிர்த்து பிற நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் சிறு வருமானம் ஈட்டியுள்ளன. Samsung நிறுவனம் 2017-ல் 34,261 கோடி ரூபாயும், Apple நிறுவனம் 2018-ல்  13,097 கோடி ரூபாயும், Lenovo-Motorola நிறுவனம் 2017-ல் 11,950 கோடி ரூபாயும் வருமானம் பெற்றுள்ளன.

Lenovo-Motorola மற்றும் Samsung நிறுவனத்தின் 2018-ன் நிதி நிலை அறிக்கை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.