ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா செய்த மிகப்பெரிய உதவி!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கபப்ட்ட கோவாக்சின் தடுப்பூசி 5 லட்சம் டோஸ்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

today world news in tamil

இந்த தடுப்பூசிகள் விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஆப்கன் தலைநகர் காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொரோனா தடுப்பூசிகள் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

வரும் வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்கி உதவிய இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் நன்றியும் தெரிவித்துள்ளது.

Advertisement