இந்தோனேசியாவில் வேட்டையில் சிக்கி தும்பிக்கையை இழந்த யானைக்குட்டி பலி

ஜகார்த்தா: ஆண் யானையின் தந்தங்கள் உலகச்சந்தையில் மதிப்புமிக்கவை. இந்தோனேசியாவில் இத்தகைய ஆண் யானைகளை வேட்டைக்காரர்கள் குறி வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அங்கு சுமத்ரா யானைக்குட்டி ஒன்று, வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் சிக்கி, அதன் தும்பிக்கையில் பாதியை பரிதாபமாக இழந்தது.

A baby elephant in Indonesia’s Sumatra island died Tuesday after losing half her trunk to a trap set by poachers who prey on the endangered species, officials said, despite efforts to amputate and treat her wounds.

இந்த யானைக்குட்டி கைவிடப்பட்ட நிலையில் ஆச்சே ஜயா நகரில் உள்ள மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக ஒரு பாதுகாப்பு நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Advertisement

அதன் எஞ்சிய தும்பிக்கையைத் துண்டித்து அதன் உயிரைக்காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவை தோல்வியில் முடிந்தன. அந்த யானைக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.

பாதி துண்டிக்கப்பட்ட தும்பிக்கையில் தொற்றுகள் ஏற்பட்டதே யானைக்குட்டியின் சாவுக்கு காரணமாக கூறப்படுகிறது.