in

மருதநாயகம் நின்று போனது ஏன்..? இன்னும் பல சுவாரசிய தகவல்..!

ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தை பார்த்து, தற்போது இந்திய சினிமா உலகமும் ஆச்சரியம் அடைகிறது.

ஆனால், ஒரு தமிழன் இயக்கிய திரைப்படம் அன்று வெளியாகியிருந்தால், உலக சினிமாவே மூக்கின் மேல் விரல் வைத்திருக்கும். ஆம் அது தான் மருதநாயகம்.

23 வருடங்களுக்கு முன் படப்பிடிப்பை தொடங்கிய இந்த திரைப்படம், தற்போது வரை வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்ன என்றும், மருதநாயகம் படத்தின் சில சுவாரசிய தகவல்களை பற்றியும் தற்போது பார்ப்போம்..

1997-ஆம் ஆண்டு அன்று கமல்ஹாசன் மருதநாயகம் என்ற படத்தை எடுக்க துவங்கினார். இந்த திரைப்படத்தின் முதல்நாள் ஷீட்டிங்கை பார்ப்பதற்கு, இங்கிலாந்து நாட்டின் அரசியே, தமிழகத்திற்கு வந்தார்.

இதனை இந்திய சினிமா, அன்னாந்து பார்த்தது. அப்போது, படத்தின் டீசருக்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை அரசிக்கு திரையிட்டார்களாம். இதனை பார்த்து பெரும் ஆச்சரியமடைந்தாராம் இங்கிலாந்து அரசி.

நாசர் போன்ற ஆகச்சிறந்த நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் சிறப்பு கதபாத்திரத்தில் நடிக்க இருந்தனர்.

1997-ஆம் ஆண்டுகளில் சுமார் 90 கோடி ரூபாயில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருந்தது . இன்றைய நாளின் படி கணக்குப்போட்டு பார்த்தால் 700 கோடி ரூபாயை எட்டும்.

மிகவும் பிரம்மான்டமான முறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு, ஆங்கிலேயே நிறுவனம் ஒன்று தயாரிப்பு பணியை மேற்கொண்டது.

ஆனால், படப்பிடிப்பு 3 நாட்கள் கடந்த நிலையில், என்ன ஆனது என்று தெரியவில்லை. அந்த தயாரிப்பு நிறுவனம், கையை விரித்தது. அந்த படத்தை தயாரிக்காமல் கைவிட்டது. இந்த தகவல் மொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர், சில நாட்களுக்கு பிறகு கமல் ஹாசன் பேட்டியளித்தார். அதில், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் மருதநாயகம் எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு 23 வருடம் ஆகிவிட்டது. இன்றும், அந்த கனவு நிறைவேறவில்லை. இன்றும் பல்வேறு சினிமா ரசிகர்கள் மருதநாயகத்திற்காக ஏங்கி வருகின்றனர். அந்த பாக்கியம் என்று தான் தமிழ் மக்களுக்கு கிடைக்குமோ..