விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். அதற்கு காரணம் இதுதான்

1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் இணையவாசிகளிடம் மிகவும் புகழ்பெற்றது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பிரவுசர்களில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் முதல் இடத்தை பிடித்தது.

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மூலமாக தனியார் நிறுவனங்கள் பல விளம்பரங்கள் அளித்து தங்களது பொருட்களை விளம்பரப்படுத்திக் கொண்டன. இதனால் ஆன்லைன் வர்த்தகமும் செழிப்படைந்தது. அதன் பிறகு Google Chrome, Mozilla Firefox, Opera Mini, UC Browser என பல பிரவுசர்கள் உருவாகின. இதன் காரணமாக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குரோம் பிரவுசரை தற்போது உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் கடந்த 26 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் செயல்படும். அதன்பின்னர் நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் சார்ந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் 2029ஆம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.