அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய மின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையைக் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

tamil news online

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் மற்றும் புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின் பாதைகளின் மூலம் இணைக்க 19 ஆயித்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி அளிப்பதற்கான பாரத்நெட் சேவை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement