அடிச்ச அடியில் நொறுங்கிய ஐபோன்’!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட பல வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஏபி டிவில்லியர்ஸும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் ஏபி டிவில்லியர்ஸ் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

பயிற்சியின் போது ஏபி டிவில்லியர்ஸ் அடித்த பந்து ஒன்று அவரது ஐபோனில் பட்டுள்ளது. இதனால் ஐபோன் உடைந்துள்ளதாக ஏபி டிவில்லியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.