மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது.

கமல் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா கௌரவ தோற்றத்தில் இடம் பெற்றுள்ளார்.
Advertisement

இந்நிலையில் தற்போது சூர்யாவின் இரும்பு கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.