இருட்டு கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை..! காரணம் கொரோனா..!

நெல்லை டவுன் பகுதியில் நெல்லையப்பர் கோயில் எதிரே உள்ள இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரசிதிப்பெற்றது.

இந்த கடையில், அல்வா வாங்கி சாப்பிடுவதற்காக, நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நபர்களும் ஆர்வமாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு மிகவும் பேமஸான கடை அது.

இந்நிலையில், அந்த கடையின் உரிமையாளர் ஹரி சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கொரோனா ஏற்பட்டதால், அந்த பயத்தின் காரணமாக ஹரி சிங் தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.