வெயில்காலம் வந்துவிட்டாலே தர்பூசணி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக இருக்கிறது. இதன் இனிப்பு சுவையும் குளிர்ச்சியுமான தன்மையும் நம்மை கவரும். தர்பூசணி பழம் பெரிதாகவே இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் முழுப்பழத்தையும் சாப்பிட முடியாமல், பாதி மட்டும் சாப்பிட்டு, மீதியை சேமித்து வைக்க நேரிடும்.
நறுக்கிய தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
நிபுணர்களின் ஆலோசனையின் படி, நறுக்கிய தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனால், வைக்கும் முறையில் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
நறுக்கிய தர்பூசணியை நேரடியாக ஃப்ரிட்ஜில் வைக்காமல், ஒரு சுத்தமான பாத்திரத்தில் போட்டு அதன் மேல் அலுமினியம் ஃபாயிலால் மூடி வைக்க வேண்டும். காற்றோட்டம் ஏற்பட சிறிய ஓட்டை வைக்கலாம். இது தர்பூசணியின் சுவையையும் சுகாதாரத்தையும் காக்க உதவும்.
Also Read : வெயில் காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்கும் இளநீர்
தர்பூசணியை வெட்டிய உடனே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டியது அவசியம். வெளியே நீண்ட நேரம் வைத்துவிட்டால், பாக்டீரியா வளர வாய்ப்பு அதிகம்.
நறுக்கிய தர்பூசணியை அதிகபட்சம் 3 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். எனவே இந்த பழத்தை அதிக காலம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும்.