in

ஐடிசி நிறுவனம் கடந்து வந்த பாதை

ஆசிர்வாத் ஆட்டா, பிங்கோ சிப்ஸ், விவேல் சோப், சாவ்லான் சோப் & ஹேண்ட்வாஷ், மங்களதீப் அகர்பத்திகள் என பலதுறைகளில் வெற்றிநடை போட்டு வரும் ஐடிசி நிறுவனத்தை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.

ஐடிசி லிமிடெட்” முதலில் Imperial Tobacco என்று பெயரிடப்பட்டது. பிறகு “Imperial Tobacco Company of India Limited” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் ஆகஸ்ட் 24, 1910 இல் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் கீழ் உள்ள “Indian Leaf Tobacco Development Company Limited” ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் 1912 இல் உருவாக்கப்பட்டது. 1913 இல் பெங்களூரில் முதல் சிகரெட் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

1925 ஆம் ஆண்டில் பேக்கேஜிங் மற்றும் அச்சிடும் வணிகம் அமைக்கப்பட்டது. சிகரெட் உற்பத்திக்காக இந்தியா முழுவதும் அதிகமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.

ஐடிசி நிறுவனம் தனது இறக்குமதி செலவுகளை குறைக்க சிகரெட் மற்றும் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் ஆலையை 1946 ஆம் ஆண்டில் தொடங்கியது. அதன் பிறகு பிரிண்டிங் மற்றும் பேக்கேஜிங் செய்வதற்காக ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

அக்டோபர் 27, 1954 அன்று இந்நிறுவனம் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டது. அதே ஆண்டில் 6% இந்திய பங்குகளை வைத்திருந்தது. நுகர்வோர் ஆராய்ச்சியில் இறங்கிய முதல் இந்திய நிறுவனமாகவும் ஐ.டி.சி மாறியது.

1960 களில், சிகரெட் தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டிய இந்நிறுவனம் உற்பத்தி வசதிகளை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தியது.

1969 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவராக அஜித் நரேன் ஹஸ்கர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹஸ்கரின் தலைமையில், நிறுவனத்தின் பெயர் “இம்பீரியல் டொபாகோ கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட்” என்பதிலிருந்து 1970 இல் “இந்தியா புகையிலை கம்பெனி லிமிடெட்” என்று மாற்றப்பட்டது.

1973 ஆம் ஆண்டில், ஐ.டி.சி தனது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையத்தை பெங்களூரில் அமைத்தது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் பல்வகைப்படுத்தல் மற்றும் புதிய வணிகங்களில் இறங்குவதை நோக்கமாகக் கொண்டது. 1974 இல் லிமிடெட். இந்த நேரத்தில் இந்திய பங்குதாரர்கள் மேலும் 40% ஆக வளர்ந்தனர்.

1975 ஆம் ஆண்டில் சென்னையில் ஐடிசி ஹோட்டல் சோலா உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1976 ஆம் ஆண்டில் பங்குதாரர்கள் 60% க்கும் அதிகமாக இருந்தனர்.

1988 ஆம் ஆண்டில் சன் ட்ராப் என்ற பெயரில் சமையல் எண்ணெய்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஐ.டி.சி சமையல் எண்ணெய்கள் துறையிலும் நுழைந்தது. ஐ.டி.சி, வில்ஸ் என்ற பிராண்ட் மூலம், 1996 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு நிதியுதவி அளித்தது.

2000-ம் ஆண்டு, `லைஃப் ஸ்டைல்’ எனும் பிராண்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை அறிமுகப்படுத்தியது.

ஐடிசி நிறுவனத்தின் தயாரிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://www.itcportal.com/brands-microsite/