ஜெயில் திரை விமர்சனம்
ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், ரவி மரியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வெயில், அங்காடித்தெரு படங்களை இயக்கிய வசந்தபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.

சென்னையை சேர்ந்த குடிசை வாழ் மக்களை அரசாங்கம் வேறொரு பகுதியில் குடியமர்த்துகிறது. இன்னொருபுறம் கஞ்சா விற்பனை செய்யும் இரு குழுக்கள் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் காவல்துறை, அரசியல் கட்சிகள் இணைந்து கலவரத்தை உருவாக்குகிறார்கள். இதில் ஜிவி பிரகாஷின் நண்பர் கொலை செய்யப்படுகிறார்.
இதனால் ஜிவி பிரகாஷ் வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகிறது. இறுதியில் ஜிவி பிரகாஷ் தன் நண்பருக்காக பழிவாங்கினாரா? அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை மாறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜிவி பிரகாஷ் கருணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி சற்று மெதுவாக செல்கிறது.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வாழும் மக்களின் வலிகளை இயக்குனர் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கலாம்.
படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு கச்சிதமாக பொருந்துகிறது. குறிப்பாக “காத்தோடு காத்தானேன்…” என்ற பாடல் ரசிக்க முடிகிறது. அதேசமயம் தேவையற்ற பாடல்கள் திரைக்கதையின் வேகத்தை குறைக்கின்றன.
வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடித்தெரு படத்தில் சொல்ல வந்த கருத்தை மிக அழகாக சொல்லியிருந்தார் ஆனால் இந்தப் படத்தில் பல விஷயங்களை பேச வாய்ப்பு இருந்தும் அவற்றை தவற விட்டிருக்கிறார்
