50 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு..!

ராமநாதபுரத்தை அடுத்த பொக்காரனேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.

today news in tamil

50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வருகிற மே 25-ஆம் தேதி சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.

அதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதில் 800 காளைகள் பங்கேற்க இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.