நம்மில் பலருக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் உள்ளது, தூக்கமின்மை உடலையும் மனதையும் பாதிக்கிறது. தூக்கமின்மை எரிச்சல், சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதனை சரிசெய்ய ஜாதிக்காய் பொடி உதவுகிறது. தினமும் இரவு நேரத்தில் ஜாதிக்காய் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். இதுமட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள் இதில் உள்ளது.
ஜீரணத்தை மேம்படுத்தும் சக்தி ஜாதிக்காயில் உள்ளது. இதனால் வயிற்றுப்பிரச்சனைகள் தீரும். முடி வளர்ச்சிக்குத் தேவையான ஜாதிக்காயில் உள்ளதால் முடியின் ஆரோக்கியத்தை பலமடங்கு பாதுகாக்கும்.
ஜாதிக்காயை தினமும் 1 முதல் 2 கிராம் வரையில் சாப்பிடலாம். அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்று உப்புசம், செரிமானமின்மை அல்லது தொடர் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.