ஒரே நாளில் 9,703 கோடியை அள்ளிய அமேசான்…

கொரோனா பாதிப்பால் பலர் நிறுவனங்கள் சில இழப்புகளை சந்தித்தாலும், சில நிறுவனங்கள் கோடிகளை அள்ளியுள்ளன. அந்த வகையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்.காம்-ன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.9,703 கோடி மதிப்பில் சொத்தினை சேர்த்துள்ளார். இது டாலரில் 13 பில்லியன் ஆகும்.

jeff-bezos-news-tamil

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், பொதுமக்கள் வெளியில் வரமுடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அதிக பொருட்களை வாங்கியுள்ளனர். இதன் காரணமாக அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 73 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்தான் உலகின் முதல் பணக்காரராக இருக்கிறார். இந்தாண்டு தொடக்கத்தில் 74 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்து இவரது சொத்து மதிப்பு தற்போது 189.3 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!.

Advertisement