ஜிகிர்தண்டா டபுள் x.. கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்த தகவல் – குஷியில் ரசிகர்கள்

பேட்டை என்ற ஒரு திரைப்படத்திலேயே தான் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ரசிகன் என்பதை நிரூபித்தவர் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவருடைய இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் தான் ஜிகர்தண்டா.
சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெகு சுவாரசியமாக உருவான ஒரு சிறந்த திரைப்படம் என்றே கூறலாம். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த திரைப்படம் இன்னும் அழகாக தோன்றியது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் அந்த படத்தின் ஒரு தொடர்ச்சியாக ஜிகர்தண்டா டபுள் x என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வருட துவக்கத்தில் இந்த படத்தின் ஒரு டீசர் வெளியாகி ரசிகர்கள் ஆச்சர்யப்படவைத்தது குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் எஸ்.ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்த எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கார்த்திக் சுப்புராஜ், இந்த படம் தன்னுடைய கனவு திரைப்படம் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு நிச்சயம் இந்த படம் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு மாபெரும் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.