கடந்த இரண்டு வருடங்களாக ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வைஃபை, ஜியோ ஜிகா பைபர் என அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது கூகுள் குரோமுக்கு போட்டியாக “ஜியோ ப்ரெளசர்” களத்தில் இறக்கியுள்ளது.
Advertisement
இந்த ஜியோ ப்ரெளசர் இணையத்தில் எளிமையாகவும், வேகமாகவும் பிரெளசிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
4.8MB அளவு கொண்ட இந்த ப்ரெளசர் தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி என 8 இந்திய மொழிகளை அங்கீகரிக்கும்.
இந்த ப்ரெளசரை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.