கபடதாரி திரை விமர்சனம்

சிபி ராஜ், நந்திதா, நாசர், ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். சிமோன் டி கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2019ல் கன்னடத்தில் வெளிவந்த ‘கவலுதாரி’ என்ற படத்தின் ரீ – மேக்தான் இந்த ‘கபடதாரி’.

சிபிராஜ் போக்குவரத்து காவலராக பணியாற்றுகிறார். பாலம் கட்டுவதற்காக ஒரு இடம் தோண்டப்படுகிறது. அங்கு மூன்று எலும்புக்கூடுகள் கிடைக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறையை சேர்ந்த ஒருவரை கொலை செய்யப்பட்டதும் இது அவருடைய எலும்புக்கூடு என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது.

இந்த வழக்கில் காவலராக பணியாற்றும் சிபிராஜ், பத்திரிக்கையாளர் ஜெயபிரகாஷ் இருவரும் தீவிரம் காட்டுகிறார்கள். தொல்லியல் துறை அதிகாரியை கொலை செய்தது யார்? அந்த மூன்று எலும்புக்கூடுகள் யாருடையது என்று கண்டு பிடிப்பது தான் படத்தின் கதை.

கன்னட படத்தில் இருந்த காட்சிகள் அப்படியே இதிலும் உள்ளது. இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு கதை மெதுவாக நகருகிறது. இதனால் கதையை மீது இருந்த ஆர்வம் குறைந்துவிடுகிறது.

நாசர் நந்திதா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சிறப்பாக இருந்தாலும் படத்தின் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிடுகிறது.

கன்னட படத்தை பார்க்காமல் நேரடியாக இந்த படத்தை பார்த்தால் ஓரளவு ரசிக்கலாம்