நடிகர் சூர்யாவால் அப்செட்டாகிய கமல் ; இதுதான் காரணம்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்க உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

Tamil Movie News

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘விக்ரம்’ படத்தைகமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது.

Advertisement

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. அதே பகுதியில் விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வைத்துள்ளாராம்.

கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இரண்டு படப்பிடிப்பிற்கும் அனுமதி தர முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே விக்ரம் படப்பிடிப்பு துவங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

காரைக்குடியில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.