in

கமலுக்கும் எனக்கும் என்ன உறவு? நடிகை பூஜாகுமார் விளக்கம்.

கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பிறகு “தலைவன் இருக்கின்றான்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் தேவர் மகன் பாகம் 2 என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ரேவதி, பூஜாகுமார், ஆண்ட்ரியா போன்றோர் நடிக்க விருப்பதாக தகவல் வெளியானது.

இந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த நடிகை பூஜாகுமார், “தலைவன் இருக்கிறான்” படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் கமலுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு எப்படி? என்று கேள்வி கேட்கும் போது, அவருக்கு அவர் கமலையும் அவரது குடும்பத்தாரையும் எனக்கு வெகு நாட்களாகவே தெரியும். நான் நடிக்க துவங்கியதிலிருந்து அவர் குடும்பத்துடன் நல்ல பழக்கம் இருக்கிறது.

அவரது அண்ணன் மகள் அனைவரையும் எனக்கு நல்ல பழக்கம் அதனால் அவருடைய குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்று அவர் கூறினார்.

நடிகை பூஜாகுமார் கமலுடன் விஸ்வரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகம் மற்றும் உத்தமவில்லன் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவர்கள் இல்ல விழாவில் பங்கேற்ற நடிகைகளில் இவர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.