‘சார்பட்டா’ படக்குழுவினரை நேரில் சென்று பாராட்டிய கமல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சார்பட்டா படக்குழுவினரை நேரில் சென்று பாராட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தை பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ‘சார்பட்டா’ படத்தை பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதற்கான புகைப்படங்களை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement