நெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த 16 பேரில், 6 பேர் நிரந்தர ஊழியர்கள். 10 பேர் ஒப்பந்த ஊழியர்கள். ,” எனத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதே போல் கடந்த மே மாதம் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாய்லர் விபத்தில், 8 ஊழியர்களுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன.

Advertisement

இது குறித்து நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.