காஞ்சனா 3 திரை விமர்சனம்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் இன்று வெளிவந்துள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மிரட்டல் பலிவாங்கும் பேயாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சென்னையில் வசிக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா- பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தோடு கோவை செல்கிறார். அங்கே இருக்கும் மாமன் மகள்களான ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி லாரன்ஸையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவரும் 3 பெண்களுடன் ஜாலியாக டூயட் பாடுகிறார்.

இதனிடையே ராகவா லாரன்ஸின் விளையாட்டு தனத்தால் அவர் மீது ரோஸி, காளி என்ற பேய்கள் இறங்குகிறது. உடலுக்குள் புகுந்த அந்த பேய் யாரை பழிவாங்குகிறது? பழிவாங்க காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் படத்தின் கதை.

Advertisement

‘சிவலிங்கா’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனதால் பழைய பாணிக்கே சென்றுவிட்டார் போல. குழந்தைகளுக்கு பேய் கதை சொல்லுவது. பயம் வந்தால் ஓடிப்போய் அம்மா அல்லது அண்ணியின் இடுப்பில் உட்காருவது என அரைத்த மாவையே திருப்பி அரைத்துள்ளார்.

கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ் ஆகியோர் தன்னுடைய கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தியுள்ளனர். சூரி வந்த வேகத்தில் காணாமல் போகிறார்.

லாஜிக் இல்லாமல் கதை எங்கெங்கோ நகர்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள், எடிட்டிங் படத்தின் பலவீனம். படத்தில் உள்ள 6 பாடல்களும், படத்தின் நீளமும் ரசிகர்களை ரொம்பவே சோதிக்கிறது.

காஞ்சனா 3 புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை