Search
Search

“கங்குவா ஆட்டம் தொடரும்”.. கொடைக்கானலில் முடிவடைந்த படப்பிடிப்பு – அடுத்தது என்ன?

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான், இதுவரை தமிழில் யாரும் கேள்வி படாத ஒரு பெயரான கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

கடந்த 22 நாட்களாக கொடைக்கானலில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது கொடைக்கானலில் நடந்து வந்த படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இனி வரலாற்று பாகங்களுக்கான படபிடிப்பு நடக்க இருப்பதாகவும், அதற்கான அரங்க அமைப்புகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. கொடைக்கானலில் இருந்து இயக்குநர் சிறுத்தை சிவா அவர்களுடன் கதையின் நாயகன் சூர்யா இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழில் இதுவரை வெளியான படங்களை விட அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதே போல சூர்யாவின் படங்களில் இதுவே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் படம் என்றும் கூறப்படுகிறது.

You May Also Like