கங்குவா பட டிஜிட்டல் உரிமத்தை பெற்ற முன்னணி நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வெளியிட உள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலேயே ரசிகர்கள் இதை உச்சகட்ட முறையில் கொண்டாடி வருகின்றனர்.
இதுவரை தமிழில் கேள்விப்படாத ஒரு பெயரை தலைப்பாக கொண்டு, பலரும் ஆச்சரியப்படும் வண்ணம் டைட்டில் போஸ்டர் வெளியிட்டு படக்குழு அசத்தி வருகிறது. இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழில் உருவாகும் அதிக பட்ஜெட் திரைப்படமும் இது தான் என்ற சில தகவல்களும் அவ்வப்போது வெளிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை தற்பொழுது பிரபல அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி சுமார் 80 கோடி ரூபாய்க்கு இந்த பட டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பெற்றுள்ளது. இன்னும் ஷூட்டிங் முழுமை அடையாத நிலையில் ஒரு திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
குறிப்பு : இந்த 80 கோடி டிஜிட்டல் உரிமம் என்பது, தென்னிந்திய டிஜிட்டல் உரிமம் மட்டும் என்பதையும் ஞானவேல் தெளிவாக கூறியுள்ளார்.