Connect with us

TamilXP

கங்குவா படத்தின் ட்ரைலர் ரெடி.. எப்போது ரிலீஸ்?

சினிமா

கங்குவா படத்தின் ட்ரைலர் ரெடி.. எப்போது ரிலீஸ்?

2024 ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கங்குவா. சூர்யா நடிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

கங்குவா படத்தின் மூலம் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கங்குவா படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.

கங்குவா படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு வெளிவரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டு துவங்கி, படம் 2027லில் வெளிவரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top