பஸ் – லாரி மோதி பயங்கர விபத்து – 9 பேர் பலி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பூனே தேசிய நெடுஞ்சாலையில் தானே புரம் என்ற பகுதியில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாபூர் என்ற பகுதியில் இருந்து தனியார் சொகுசு பஸ் பயணிகளுடன் பெங்களூரு நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் தானே புரம் என்ற பகுதியில் பஸ் – லாரி நேருக்கு மோதிக்கொண்டது.

Advertisement

இந்த கோர விபத்தில் பஸ் ஓட்டுநர் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் என 9 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நடந்த இதே இடத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சொகுசு பஸ் ஒன்று விபத்தை சந்தித்து 11 பேர் உயிரிழந்தனர்.