கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் கருப்பு கவுனி அரிசி

வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது கருப்பு கவுனி அரிசி. பெரும்பாலும் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இவை விளைவிக்கப்படுகின்றன.

கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தியையும் கொண்டிருக்கிறது.

இருதய பாதுகாப்பு

கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.

நீரழிவு நோய்

கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர்.

குதிரைவாலி அரிசி நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

கருப்பு கவுனி அரிசியில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

உடல் எடையை குறைக்க

கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

மூளை செயல்பாடு

கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோசைனின், நம்முடைய மன அழுத்தத்தை குறைத்து சிறந்த மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

எச்சரிக்கை : இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும். எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும்

Recent Post