விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தால் கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது

விலைவாசி உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் மக்கள் நடத்திய போராட்டத்தால் அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்று கஜகஸ்தான். இங்கு புத்தாண்டையொட்டி திரவ பெட்ரோலிய எரிவாயுக்கான விலை அதிகரித்தது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து தலைநகர் அல்மாட்டி, மேற்கு மாகாணமான மங்கிஸ்டாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர். அரசு கட்டடங்கள், வாகனங்களை தீவைத்து கொளுத்தினர். பேருந்து போக்குவரத்தை தடை செய்தனர்.

Advertisement

இதையடுத்து அந்நாட்டு அரசு ராஜினாமா செய்துள்ளது. இந்த ராஜினாமாவை அந்நாட்டு அதிபர் காசிம் ஜோமார்ட் டோக்காயேவ் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.