தெலுங்கில் ரீமேக் ஆகிறது அஜித்தின் வேதாளம். லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்

கடந்த 2015-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருந்தார். அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் தற்போது தெலுங்கி ரீமேக் ஆகிறது. கடும் போட்டிக்கு பிறகு ‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது.
‘வேதாளம்’ படத்தில் அஜித்துக்குப் பிறகு லட்சுமி மேனன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகும் சாணி காயிதம் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.