Search
Search

கேஜிஎஃப் 2 திரை விமர்சனம்

கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றியடைந்ததால் அதன் இரண்டாம் கேஜிஎஃப் 2 இன்று வெளியாகியுள்ளது. யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது.

kgf 2 review in tamil

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார்.

கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு யஷ் நல்லது செய்து வருகிறார். யஷ்க்கு முன்னால் கே.ஜி.எஃப்-பை பிடிக்க திட்டம் போட்டவர்கள் யஷை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார்.

இறுதியில் யஷ் எதிரிகளிடமிருந்து கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? சஞ்சய் தத் என்ன ஆனார் என்பதே படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் யஷ் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் மாஸ் ஹீரோவாக வலம் வந்துள்ளார். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அளவான நடிப்பை கொடுத்துள்ளார். அரசியல் தலைவராகவும் ரவினா டாண்டன் திறமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

சஞ்சய் தத் நடிப்பில் மிரட்டியுள்ளார். அவருடைய கெட்டப்பும் பார்வையும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறது.

விறுவிறுப்பான திரைக்கதை, மிரட்டலான சண்டைக்காட்சிகள், அழுத்தமான வசனம் என ரசிகர்கள் ரசிக்கும் விதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ரவி பஸ்ரூர் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

மொத்தத்தில் ‘கே.ஜி.எஃப் 2 – மாஸ்

Leave a Reply

You May Also Like