கே.ஜி.எஃப் படத்தில் நடித்த மோகன் ஜுனேஜா காலமானார்.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார். இதையொட்டி ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் மோகன் நடித்துள்ளார்.

கே.ஜி.எஃப் படத்தில் ‘கேங்க கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்… ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்’ என அவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தது.

Advertisement

54 வயதான மோகன் ஜுனேஜா நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். பெங்களூரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது.