in

KGF 2 – க்கு ஆவலாக இருப்பவரா நீங்க..? உங்களுக்கொரு அதிர்ச்சி தகவல்..!

2018-ஆம் ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். கன்னட மொழியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது.

யஷ், சஞ்சய் தத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்த இந்த திரைப்படம், வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் 2-ஆம் பாகம் வெளியாகும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

திரைப்படம் அக்டோபர் 23-ஆம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துவிட்ட நிலையில், இன்னும் 2 சண்டைக்காட்சிகள் எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த காட்சிகள் தவிர, மற்ற காட்சிகளுக்கான இசைக்கோர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

ஊரடங்கு முடியாமல் இருப்பதைப்பார்க்கும்போது, படம் கூறிய தேதியில் வெளியாகும் அபாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், சொன்ன தேதியில் படம் வெளியாகமல் போகுமோ என கவலையில் உள்ளனர்.