தூக்கு மேடையில் கொலையாளி – இறுதியில் வென்றது தாய்மை

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணுக்கு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்த கொலைகாரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடைக்கு எதிரே கொலையுண்டவரின் தாயார் அமைதியாக அமர்ந்திருந்தார்.

காரணம், தூக்குக்கயிறு மாட்டப்பட்டு கொலையாளி நிற்கவைக்கப்பட்டிருக்கும் நாற்காலியை கொலையுண்டவரின் தாயார் உதைத்துத் தள்ளி கொலையாளியின் மரண தண்டனையை நிறைவேற்றுவதுதான் அந்நாட்டு வழக்கமாகும்.

மரண தண்டனையை நிறைவேற்றும் நேரம் நெருங்குகையில் கொலையுண்டவரின் தாயார் தூக்கு மேடையில் மெல்ல ஏறி கொலையாளி நிற்கும் நாற்காலியை எட்டி உதைப்பதற்கு பதில் அந்த கொலையாளியின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த தூக்குக்கயிறை அவிழ்த்துவிட்டு உன்னை மன்னித்து விட்டேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

Advertisement

இங்கு புகைப்படமாக காட்சி படுத்தப்பட்டிருப்பது, சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் தன் மகனை கொன்றவனின் மரண தண்டனையை நிறைவேற்றாமல் தன் முடிவை மாற்றி மன்னிப்பு அளித்த ஒரு அற்புதமான தாயின் கருணையைக் காட்டுகிறது.

தன்னைப் போன்று இன்னொரு தாய் துயரப்ப்படக்கூடாது என்று அவர் நினைத்ததே அதற்குக் காரணம். என்னதான் கொலையாளி என்றாலும் அவனும் ஒரு தாய்க்கு மகன் தானே!

கொலைகாரனுடைய தாய் கொலையுண்டவரின் தாயைக் கட்டி அழுதபோது எடுத்த புகைப்படம்தான் இது..

இறுதியில் தாய்மை வென்றது